நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லஞ்சம் வாங்கிய போலிஸ் அதிகாரிக்கு 4 நாட்கள் ரிமாண்ட்

ஜார்ஜ் டவுன்

RM20,000-க்கும் அதிகமான லஞ்சம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக, உதவி போலீஸ் கண்காணிப்பாளர் (ASP) பதவியில் உள்ள ஒரு காவல் அதிகாரி, புதன்கிழமை முதல் நான்கு நாட்கள் ரிமாண்ட் செய்யப்படுகிறார்.

58 வயதுடைய அந்த நபருக்கு எதிரான ரிமாண்ட் உத்தரவை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில்,  மாஜிஸ்திரேட் நாத்ரதுன் நைம் முஹம்மது சயிடி பிறப்பித்தார்.

SPRM லாக்கப் உடையில் இருந்த அந்நபர், காலை 8.45 மணியளவில்,   நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.30 மணிக்கு, பினாங்கு SPRM அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

“2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், ஐந்து நபர்களிடமிருந்து மொத்தமாக RM20,000-க்கும் மேற்பட்டத் தொகையை லஞ்சமாக கேட்டும் பெற்றும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

“அவர் பினாங்கு காவல் துறை தலைமையகம் (IPK) இல் இன்னும் பணியாற்றி வந்தார்,” என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், கைது செய்வதற்கு முன்  சந்தேகநபர் குறித்து SPRM உளவுத்துறை விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவித்தது.

“இந்த வழக்கு, 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் (Akta SPRM 2009) இன் பிரிவு 17(a)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது,” 

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset