நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போக்குவரத்து அமைச்சின் ஃபிளைசிஸ்வா திட்டம் உயர் கல்வி மாணவர்களின் பயண சுமையை குறைக்கும்: டத்தோஶ்ரீ ஜனசந்திரன்

புத்ராஜெயா:

போக்குவரத்து அமைச்சின் ஃபிளைசிஸ்வா திட்டம் உயர் கல்வி மாணவர்களின் பயண சுமையை வெகுவாக குறைக்கும்.

போக்குவரத்து அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ ஜனசந்திரன் இதனை கூறினார்.

சபா, சரவா, லாபுவானில் இருந்து  உயர் கல்வி பயில மாணவர்கள் தீபகற்ப மலேசியாவுக்கு வருகின்றனர்.

அதே போன்று தீபகற்ப மலேசியாவில் இருந்தும் மாணவர்கள் அங்கு செல்கின்றனர்.

அப்படி செல்லும் மாணவர்கள் விமான பயண சுமையை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் முயற்சியில் இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

விமான பயணங்கள் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 400 ரிங்கிட் மதிப்பிலான இலக்கவியல் பற்றுசீட்டுகள் வழங்கப்படும்.

இந்த பற்றுசீட்டுகளை பயன்படுத்தி மாணவர்கள் மலேசிய ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா, பாத்தேக் ஏர், ஃபயர்பிளை, ஏர் போர்னியோ ஆகிய விமான நிறுவனங்களில் டிக்கெட்டுகளை வாங்கி கொள்ளலாம்.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் வரை கிட்டத்தட்ட 119,790 மாணவர்கள் இத் திட்டத்தின் வாயிலாக பயன் பெற்றுள்ளனர்.

அதே வேளையில் இவ்வாண்டும்  மனிதவள அமைச்சின் கீழ் உள்ள தொழில் திறன் பயிற்சி கல்லூரிகள், மாநில அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 158,600 தகுதி பெற்ற மாணவர்களுடன் புதியதாக 6,278 மாணவர்களும் இத் திட்டத்தில் சேர்க்கப்படுவர்,

மாணவர்களின் பொருளாதார இடைவெளி, குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல் உட்பட பல்வேறு காரணங்களுக்காக அமைச்சர் அந்தோனி லோக் இத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

தற்போது மாணவர்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் இத்திட்டத்தை அனைத்து மாணவர்களும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டத்தோஶ்ரீ ஜனசந்திரன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset