நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பயனர் பாதுகாப்பிற்காக எக்ஸ் தளத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எம்சிஎம்சி பரிசீலித்து வருகிறது: ஃபஹ்மி

ஷாஆலம்:

பயனர் பாதுகாப்பிற்காக எக்ஸ் தளத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எம்சிஎம்சி பரிசீலித்து வருகிறது.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

பயனர் பாதுகாப்பை உறுதி செய்வதை சமூக ஊடக தளமான எக்ஸ் தளம் த் தவறியுள்ளது.

இதனால் அத்தளம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து எம்சிஎம்சி  பரிசீலித்து வருகிறது..

எக்ஸ் தள நிர்வாகத்தை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது குறித்து அவர்கள் பரிசீலித்து வருகின்றனர் என்று ஃபஹ்மி கூறினார்.

நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்து, பொது ஒழுங்கை அச்சுறுத்தும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை பரப்பியதாகக் கூறி, கடந்த ஆண்டு செய்தி தளமான டெலிகிராம், இரண்டு சேனல்களுக்கு எதிராக எம்சிஎம்சி தொடர்ந்த வழக்குடன் இந்த சாத்தியமான நடவடிக்கையை அவர் ஒப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset