நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஏற்ற ஹோட்டல்: சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது

மலாக்கா:

மலாக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஏற்ற ஹோட்டல் இருப்பது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இது நேற்று முதல் இணைய பயனர்களிடையே சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

சுயாதீன போதகர் ஃபிர்தௌஸ் வோங்கின் ஒரு பதிவின் மூலம், 'நட்பு' என்ற லேபிளைப் பயன்படுத்தி வணிகங்களை பிராண்டிங் செய்யும் போக்கு குறித்து அவர் கேள்விகளை எழுப்பினார்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஏற்ற என்ற கருத்தை செல்லப்பிராணிகளுக்கு ஏற்றது, குடும்ப நட்பு, முஸ்லிம் நட்பு போன்ற பிற சொற்களுடன் ஒப்பிட்டப்படுகிறது.

அவை இப்போது வணிக பிராண்டிங் உத்தியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.

பிராண்டிங் மிகவும் ஆக்கப்பூர்வமானது. முஸ்லிம் நட்பு என்ற லேபிளைக் கூட ஒரு வணிகமாகப் பயன்படுத்தலாம்.

ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஏற்றது என்பது பல கேள்விகளையும் அதிருப்தியும் எழுப்புகிறது என்று அவர் தனது பதிவில் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset