நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈரானின் வர்த்தக பங்காளிகள் 25 சதவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டும்: டிரம்ப்

வாஷிங்டன்:

ஈரானின் வர்த்தக பங்காளிகள் 25 சதவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதனை அறிவித்தார்.

ஈரானில் பல ஆண்டுகளாக மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களைக் கண்டுள்ள நிலைமைக்கு வாஷிங்டன் பதிலளிக்கும் விதமாக இதுஅமைந்துள்ளது.

ஈரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் 25 சதவீத வரியை எதிர்கொள்ளும்.

உடனடியாக அமலுக்கு வரும் வகையில், ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடனான எந்தவொரு,  அனைத்து வணிக பரிவர்த்தனைகளுக்கும் 25% வரிக்கு உட்பட்டது ஆகு.

அந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க இறக்குமதியாளர்களால் வரிகள் செலுத்தப்படுகின்றன.

ஈரான் பல ஆண்டுகளாக வாஷிங்டனின் கடுமையான தடைகளுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த உத்தரவு இறுதியானது மற்றும் உறுதியானது என்று டிரம்ப் மேலும் விவரங்களை வழங்காமல் டிரம்ப் இவ்வாறு கூறினார்.

ஈரானிய பொருட்களுக்கான முக்கிய ஏற்றுமதி இலக்குகள் சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset