நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதத்தை தவறாக பயன்படுத்தும் தீவிரவாத கும்பல், போராளிகளை போலிஸ் கண்காணிக்கிறது: அயோப் கான்

கோலாலம்பூர்:

மதத்தை தவறாக பயன்படுத்தும் தீவிரவாத கும்பல், போராளிகளை போலிஸ் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தேசிய போலிஸ்படையின் துணைத் தலைவர் டான்ஶ்ரீ அயோப் கான் இதனை கூறினார்.

தற்கொலை நடவடிக்கைகளை நியாயப்படுத்த மதத்தை சுரண்டும் தீவிரவாத அல்லது போராளி குழுக்களை கண்காணிப்பது தேசிய பாதுகாப்பிற்காக செய்யப்பட வேண்டும்.

டிசம்பர் 2001 முதல் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் 1960 (ஐஎஸ்ஏ) இன் கீழ் ஜெமா இஸ்லாமியா குழுவைக் கண்டறிந்து பெரிய அளவிலான நடவடிக்கைகளைத் தொடங்குவதில் சிறப்புப் பிரிவு வெற்றி பெற்றது.

இதனை மூலம் மலேசியாவில் ஜெமா இஸ்லாமியாவின் வன்முறைத் திட்டங்களை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதில் இக்குழுவின் நடவடிக்கைகள், மலேசியாவில் தாக்குதல்களைத் தொடங்குவது ஆகியவை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

கூடுதலாக, 'கிடல்' ஜிஹாத் அல்லது போர் ஜிஹாத் மூலம் 'குஃப்ர்' என்று கருதப்படும் மலேசிய அரசாங்கத்தை அவர்கள் கவிழ்க்க விரும்புகிறார்கள்.

இது மலேசியர்கள் தேர்தல் முறை மூலம் அரசாங்கத்தை அமைக்க இடமளிக்கும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைப் பின்பற்றும் இந்த நாட்டின் முக்கிய மதிப்புகளுக்கு எதிரானது என்பது தெளிவாகிறது.

இது சம்பந்தமாக, தற்கொலை நடவடிக்கைகளை நியாயப்படுத்த மதத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் தீவிரவாத அல்லது போராளிக் குழுக்களைக் கண்காணிப்பது மிகவும் அவசியம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset