நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மும்பை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து

மும்பை:

மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர்களில் சபாநாயகரின் சகோதரனான மகரந்த் நர்வேகரின் சொத்து கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 20 மடங்கு அதிகரித்துள்ளது. 

மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவர் தான் மிகவும் பணக்கார வேட்பாளராக கருதப்படுகிறார்.

தனது சொத்து குறித்து அவர் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிபிட்டுள்ளார். தென்மும்பையில் உள்ள 226வது வார்டில் போட்டியிடும் மகரந்த் நர்வேகர் 2017ம் ஆண்டு தேர்லில் போட்டியிட்டபோது அவரது சொத்து ரூ.6.3 கோடியாக இருந்தது. ஆனால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் கவுன்சிலராக இருந்துள்ள மகரந்த் நர்வேகரின் சொத்து கடந்த 8 ஆண்டில் ரூ.124 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

இதில் அசையும் சொத்துக்கள் 32.14 கோடியும், அசையா சொத்துக்கள் 92.32 கோடியும் இருக்கிறது. கடந்த 8 ஆண்டில் நிலம், வீடுகள் என அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset