நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டருகில் நிலம் உள்ள அரசு ஊழியர்கள் காய்கறி பயிரிட வேண்டும்: விவசாய அமைச்சர் சாபு பரிந்துரை

புத்ராஜெயா: 

மேற்கு ஆசியாவில் நடைபெறும் மோதல் நீடித்தால் உள்நாட்டு உணவு வழங்கலை அதிகரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிலம் கொண்ட வீடுகளில் வசிக்கும் அரசு ஊழியர்கள் காய்கறி பயிரிடத் தொடங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை, உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் சாபு கூறுகையில், தங்களது வீடுகளில் நிலப்பரப்பு உள்ள அரசு அதிகாரிகள் மிளகாய், கத்தரிக்காய், குச்சாய் போன்ற அடிப்படை காய்கறிகளைப் பயிரிடத் தொடங்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த நடவடிக்கை சமூக மட்டத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் ஆரம்ப முயற்சியாகவும் கருதப்படுகிறது.

“நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கும் அதிகாரிகள், அதாவது அடுக்குமாடி வீடுகள் அல்லது அபார்ட்மெண்ட்கள் அல்ல, குறைந்தபட்சம் விரைவாக விளையும் பயிர்களான மிளகாய், கத்தரிக்காய், குச்சாய் போன்றவற்றை வளர்க்கத் தொடங்க வேண்டும் என்று நான் அறிவுறுத்துவேன்,” என்று அவர் இன்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், இந்த நடவடிக்கை முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் ஹுசைன் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட “பச்சை புத்தகப் பிரச்சாரம்” (Kempen Buku Hijau) என்ற அணுகுமுறையிலிருந்து ஊக்கமடைந்ததாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியாததால், இந்த முயற்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது என்றும் முகமட் சாபு தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset