செய்திகள் மலேசியா
“அரையாண்டு வரை மலேசியாவில் உணவு தட்டுப்பாடில்லை”: டத்தோ ஸ்ரீ முஹம்மத் சாபு
புத்ராஜெயா:
மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், மலேசியாவின் உணவு இருப்பு குறைந்தது இந்த ஆண்டின் பாதியளவு வரை போதுமானதாக இருக்கும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
உலகளாவிய நிச்சயமற்ற சூழல் நிலவினாலும், நாட்டின் உணவுப் பாதுகாப்பு தற்போது நிலையாக உள்ளதாக விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் சாபு தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், மலேசியாவின் பெரும்பாலான உணவு இறக்குமதி ஆதாரங்கள் மேற்காசியாவின் மோதல் நிறைந்த பகுதிகளின் வழியாக வருவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, மலேசியாவிற்குத் தேவையான உணவுப் பொருட்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆசியான் நாடுகள், பிரேசில், அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தப் போக்குவரத்து பாதைகள் பாதிப்புக்குள்ளாகாத பகுதிகளில் அமைந்துள்ளதால், உணவு விநியோகத்தில் எவ்வித தடையுமிருக்காது என்று அமைச்சர் மேலும் விளக்கமளித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 6:33 pm
சிலிம்ரீவர் ஸ்ரீ மகா லெட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது: டத்தோ சிவக்குமார்
March 13, 2026, 5:32 pm
மலேசியாவில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம்: கோலாலம்பூரில் திரண்ட தன்னார்வலர்கள்
March 13, 2026, 5:30 pm
கிள்ளானில் பரபரப்பு: போலிஸ் வாகனத்தை மோதி தப்பிச் சென்ற ஆடவர் கைது
March 13, 2026, 5:28 pm
வீட்டருகில் நிலம் உள்ள அரசு ஊழியர்கள் காய்கறி பயிரிட வேண்டும்: விவசாய அமைச்சர் சாபு பரிந்துரை
March 13, 2026, 5:25 pm
காலைத் தொழுகைக்கு வரும் குழந்தைகளுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கும் அல்-குட்ஸ் பெராமு பள்ளிவாசல்
March 13, 2026, 2:06 pm
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை கொன்ற ஆடவர்
March 13, 2026, 2:05 pm
திரெங்கானு அரசு ஊழியர்களுக்கு நோன்புப்பெருநாள் சிறப்பு உதவி
March 13, 2026, 2:01 pm
