நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலைத் தொழுகைக்கு வரும் குழந்தைகளுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கும் அல்-குட்ஸ் பெராமு பள்ளிவாசல்

பெக்கான்: 

இந்த ரமலான் காலத்தில், இங்கு உள்ள அல்-குட்ஸ் பெராமு பள்ளிவாசலில் சுபுஹ் தொழுகைக்கு வரும் ஒவ்வொரு  7 முதல் 12 வயது குழந்தைக்கும் RM3 பரிசு வழங்கப்படுகிறது.

முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த “வீரா சுப்ஹ்” நடவடிக்கையின் முக்கிய நோக்கம் இளம் தலைமுறையைப் பள்ளிவாசலுக்கு பெற்றோருடன் வருவதை ஊக்குவிப்பதும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதும் ஆகும்.

முன்னதாக அல்-குர்ஆன், ஃபர்து ஐன் மதிப்பீட்டில் (யுபிகேகே) சிறந்து விளங்குவதற்கான ஊக்குவிப்புகளையும், பதின்ம வயதினருக்கான குர்ஆனை நிறைவு செய்ததற்கான பரிசுகளையும் டுயிட் ராயவையும் ஒவ்வொரு நோன்புப் பெருநாளுக்கும் வழங்கப்படுவதாக அல்-குத்ஸ் பெரமு பள்ளிவாசலின் தலைவர் அப்துல் ரஹ்மான் சலிமின் தெரிவித்தார்.

“எங்கள் நிர்வாகக் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, ரமலான் முழுவதும் ஒவ்வொரு காலை தொழுகைக்கு வரும் 7–12 வயது குழந்தைகளுக்கு RM3 ஊக்கத் தொகை வழங்க தீர்மானித்தோம். இந்த ஊக்க ஊதியத்தை எதிர்காலத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பள்ளி விடுமுறை காலங்களில் தொடர்ந்து வழங்க திட்டமிட்டுள்ளோம்.

“கம்போங் கிளாட் ரெண்டான், தாமான் பெருமாஹன் இக்சோரா ஆகிய பகுதிகளின் குழந்தைகள்  மார்க்கப் பயிற்சியை தொடர்ச்சியாக பெற வேண்டும்.

எங்களின் இந்த முயற்சிக்கு அளிக்கப்படும் வரவேற்பு எங்களை மிகவும் உற்சாகமாக்கி உள்ளது. பெற்றோர்களுடன் பல குழந்தைகள் காலை தொழுகை  செய்ய வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறினார், “பல பெற்றோர்கள் பள்ளிவாசலின் இந்த முயற்சியை பாராட்டுகிறார்கள். ஏனெனில் அவர்களின் குழந்தைகள் காலை எழுந்து சுப்ஹ் தொழுகைக்கு காத்திருக்கின்றனர். நாங்கள் எச்சரிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை”.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset