நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைமைத்துவம் என்பது நேர்மை, மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

தலைமைத்துவம் என்பது நேர்மை, மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

தலைமை என்பது நேர்மை, ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அர்ப்பணிப்பு மக்களின் பிரச்சினைகளை,

குறிப்பாக வாழ்க்கைச் செலவு மற்றும் வருமானம் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

அரசாங்கம் நிறுவன சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வரும் வேளையில், அத்தகைய தலைமை மக்களுக்கு நெருக்கமாக இருக்கவும் அவர்களின் அன்றாட சவால்களைப் புரிந்து கொள்ளவும் அவசியம்.

ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில் தனியாகச் செயல்படுவதற்குப் பதிலாக, பிரச்சினைகளை கூட்டாகத் தீர்க்க வேண்டும்.

நான் ஒரு சர்வாதிகாரி அல்ல, பிரச்சினைகளை நான் நன்றாகக் கையாள வேண்டும்.

தனக்கென செல்வத்தைத் தேடாத, குறைந்தபட்ச ஊதியக் கொடுப்பனவை ஏற்றுக்கொள்ளும், ஊழலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும்.

பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தும் ஒரு திட்டத்தைக் கொண்ட ஒரு தலைவரை நான் கற்பனை செய்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset