நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்கு முழு மன்னிப்பு வழங்குவது குறித்து விவாதிக்க அம்னோவின் 104 பிரிவுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன

கோலாலம்பூர்:

நஜிப்பிற்கு முழு மன்னிப்பு வழங்குவது குறித்து விவாதிக்க அம்னோவின் 104 பிரிவுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

அம்னோ பொதுச் செயலாளர் அஸ்ராஃப் வாஜ்டி டுசுகி  இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் துன் ரசாக்கிற்கு மாமன்னர் முழு மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வரவிருக்கும் அம்னோ பொது மாநாட்டில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும்.

நாடு தழுவிய பேராளர்களிடம் இருந்து இதுவரை பெறப்பட்ட 662 தீர்மானங்களில் 104 தீர்மானங்கள் முன்னாள் அம்னோ தலைவருக்கு நீதியை.உறுதி செய்வதற்கான முயற்சிகள் குறித்த விவாதத்தை கோரியதாகும்.

அம்னோ பிரிவுகளால் அனுப்பப்பட்ட மிகவும் சூடான அல்லது அதிக எண்ணிக்கையிலான தீர்மானங்களில், அதாவது 104 பிரிவுகள், டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு நீதி மற்றும் முழு மன்னிப்பு கோருவதாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset