நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் குறித்து ஆராய தேவையில்லை; உடனடியாக அமல்படுத்துங்கள்: சிவசுப்பிரமணியம்

கோலாலம்பூர்:

யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் குறித்து ஆராய தேவையில்லை. உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

மஇகா மத்திய செயலவை உறுப்பினர்  சிவசுப்பிரமணியம் இதனை வலியுறுத்தினார்.

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வு இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான பிடி 3 தேர்வு மீண்டும் அமல்படுத்தப்படலாம்.

இது குறித்து ஆய்வுகள் நடத்தப்படும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறியுள்ளார்.

கல்வியமைச்சரின் இந்த கருத்தை நான் வரவேற்கிறேன்.

ஆனால் இது குறித்து ஆய்வுகளை நடத்த வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை.

காரணம் இத்தேர்வுகள் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு காலக்கட்டத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் யூபிஎஸ்ஆர் தேர்வு அவ்வளவு சிறப்பாக இருக்காது.

இருந்தாலும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் முயற்சியால் யூபிஎஸ்ஆர் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் 7ஏ பெற்றனர்.

அதே போன்று பிடி 3 தேர்விலும் மாணவர்கள் சிறப்பான தேர்வை பதிவு செய்தனர்.

ஆனால் இத்தேர்வுகள் இல்லாததால் மாணவர்களின் கல்வி திறன் பெரும் சரிவை கண்டுள்ளது.

இதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு வேண்டுமானால் ஆய்வுகளை செய்யலாம்.

அதற்கு பதிலாக தேர்வு வேண்டுமா என்பதற்கு ஆய்வுகள் நடத்துவதை விட உடனடியாக தேர்வுகளை அமலுக்கு கொண்டு வர வேண்டும்ம்

மஇகா கல்விக் குழு உறுப்பினருமான சிவசுப்பிரமணியம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset