நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஸ்பெயின் சூப்பர் கிண்ண இறுதியாட்டத்தில் பார்சிலோனா

ரியாத்:

ஸ்பெயின் சூப்பர் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு பார்சிலோனா அணியினர் முன்னேறி உள்ளனர்.

கிங் அப்துல்லா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அட்லாட்டிகோ பில்பாவ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணிக்காக ராபின்ஹா இரு கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை பெரான் தோரஸ், பெர்மின் லோபஸ், ரோனி பர்த்ஜி ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா அணியினர் ஸ்பெயின் சூப்பர் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset