செய்திகள் தமிழ் தொடர்புகள்
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படும்: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை:
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.
பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959 செலவில் வழங்கப்படும்.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2026, 1:23 pm
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் சந்திக்கிறார்: சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதிப்பாரா?
November 6, 2026, 1:54 pm
சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குப் பயணம்
November 6, 2026, 11:57 am
குழந்தைகளுக்கு பிடிக்கும் வடிவிலான பட்டாசுகள் நிகழாண்டில் புதிய வரவாக விற்பனைக்கு வந்துள்ளன
November 5, 2026, 9:31 pm
தீபாவளியை முன்னிட்டு நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு
November 4, 2026, 10:59 am
முன்னாள் சுகாதார அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது
November 2, 2026, 10:31 pm
தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
November 2, 2026, 10:20 pm
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் உத்தரவு
November 1, 2026, 1:46 pm
வாலி பிறந்த நாள் விழாவில் டத்தோ ஸ்ரீ சரவணன் சிறப்புரை
October 31, 2026, 5:52 pm
