நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹம்சாவின் பதவி விலகல் கடிதம் போலியானது: எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினின் பதவி விலகல் கடிதம் போலியானது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், பெர்சத்து கட்சி ஆகியவற்றின் கடிதத்தை பயன்படுத்தி ஹம்சா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படும் இரண்டு கடிதங்கள் வெளியாகின.

டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் ராஜினாமா செய்த பிறகு இவரும் ராஜினாமா செய்தார்.

தற்போதைய அரசியல் யதார்த்தம், தேவைகளை கணக்கில் எடுத்துக்கொண்டதாகவும் கடிதத்தின் உள்ளடக்கம் தெரிவிக்கிறது.

ஆனால் சமூக ஊடகங்களில் வைரலான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினின் ராஜினாமா கடிதம் போலியானது என்று அந்த அதிகாரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset