நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிட்னியில் நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது: பிரதமர்

புத்ராஜெயா:

சிட்னியில் நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நேற்று சிட்னியில் நடந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த முயற்சிகளை முழுமையாக ஆதரிப்பதில் மலேசியா ஆஸ்திரேலியாவுடன் உறுதியாக நிற்கிறது.

குறிப்பாக இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் பொதுமக்களை குறிவைத்து வன்முறை நிகழ்த்தப்படுவதற்கு எந்த நியாயமும் இல்லை.

இந்த கடினமான காலகட்டத்தை எதிர்கொள்வதில் ஆஸ்திரேலிய மக்களுடனும் அரசாங்கத்துடனும் மலேசியா உறுதியாக நிற்கிறது.

மேலும் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின்படி நீதிக்கு கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் முழுமையாக ஆதரிக்கிறது.

இதுபோன்ற நடவடிக்கைகள் எந்த மத நம்பிக்கைகள் அல்லது கொள்கைகளின் அடிப்படையிலும் இல்லை என்று பிரதமர் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset