நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளானில் மூன்று வளாகங்கள் தீக்கிரையாகின

ஷா அலாம்: 

கிள்ளான், கம்போங் ரந்தாவ் பஞ்சாங் பகுதியில் இன்று மூன்று வளாகங்கள் தீக்கிரையாகிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச் சம்பவம் குறித்து தமது தரப்புக்கு காலை 6.52 மணிக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

கிள்ளான் வடக்கு, தெற்கு தீயணைப்பு நிலையங்களிலிருந்து 12 வீரர்கள், தீயணைப்பு வாகனங்களுடன் ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

“ஆரம்பகட்ட விசாரணையில் தீ விபத்தில் ஒரு மாடி வீடு, மணப்பெண் ஆடைகள் விற்கும் கடை, மளிகைக் கடை ஆகியவை சேதமடைந்தன.

“வீடு 30 சதவீதம் எரிந்துள்ளது, மணப்பெண்ணின் ஆடைகள் கடை 98 சதவீதமும், மளிகைக் கடை 80 சதவீதமும் எரிந்துள்ளன,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

-சங்கீர்த்தனா 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset