நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசைக் கவிழ்க்கும் திட்டத்தில் முன்னணி சியோனிஸ்ட் குழுக்கள் தொடர்பு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர்: 

தற்போது போலீஸ் விசாரணையில் உள்ள அரசங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் வெளிநாட்டு தரப்புகள் உள்ளூர் நபர்களுடன் கூட்டுச் சேர்ந்ததுடன் மட்டுமல்லாமல், முன்னணி சியோனிஸ்ட் குழுக்களின் நேரடி ஈடுபாடும் இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெளிப்படுத்தியுள்ளார்.

மலேசிய காவல் துறை (PDRM) விசாரணையை முழுமைப்படுத்த இன்னும் சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதன் பின்னர் தேவையானால் அந்தத் தகவல்கள் பொதுமக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிரப்படும் என்றும் அவர் கூறினார்.

“நாளை ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினரை பாதுகாக்க முயற்சிக்கும் நபர் யார் என்பதை தெரிந்துகொண்டால், அவர் முன்னணி சியோனிஸ்ட் குழுவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவரும். காத்திருங்கள். ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் பொறுமையாக இருங்கள். உண்மை வெளிப்பட்டதும், அதை விளக்கமாகச் சொல்லலாம்.

“நாம் யாரைப் பாதுகாக்க விரும்புகிறோம்? நமது நிலைப்பாட்டைப் பாதுகாக்க உலகில் வேறு யாரும் இல்லை. இஸ்லாத்துக்கும், காசாவைப் பாதுகாக்கும் நாடுகளுக்கும் எதிராகச் செயல்படும் சியோனிஸ்ட் தலைவர்களை மட்டுமே நாம் குறிப்பிட முடியும். அதிலும், நேற்று (ஈரான் குறித்து) நாம் வெளியிட்ட அறிக்கையையும் கருத்தில் கொண்டால்,” என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset