நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதிபதியை நீக்குவதற்கான இறுதி முயற்சியில் ரோஸ்மா தோல்வியடைந்தார்

கோலாலம்பூர்:

நீதிபதியை நீக்குவதற்கான இறுதி முயற்சியில் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் தோல்வியடைந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன்னை குற்றவாளி என்று தீர்ப்பளித்த விசாரணை நீதிபதி தன்னைத்தானே விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி 1.25 பில்லியன் ரிங்கிட் சோசார் திட்ட ஊழல் வழக்கில் மறு விசாரணைக்கு உட்படுத்தும் இம்முயற்சியில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

இன்று கூட்டரசு நீதிமன்றத்தின் ஒருமனதான தீர்ப்பைத் தொடர்ந்து, தனது 10 ஆண்டு சிறைத்தண்டனை, 970 மில்லியன் ரிங்கிட் அபராதத்திற்கு எதிரான ரோஸ்மாவின் மேல்முறையீடு இந்த ஆண்டு இறுதியில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவின் தலைவரான நீதிபதி நோர்டின் ஹசன், விசாரணை நீதிபதி ஜைனி மஸ்லான் ஒருதலைப்பட்சமானவர் என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் கூறினார்.

விசாரணை நீதிபதி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார் என்பதைக் காட்ட மேல்முறையீட்டாளர் (ரோஸ்மா) தவறிவிட்டார்.

நீதி தவறிழைக்கப்படவில்லை என்று நீதிபதி ருசிமா கசாலி,  நீதிபதி அசிமா உமருடன் அமர்ந்திருந்த நோர்டின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset