நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2022 முதல் போலி உள்ளடக்கத்தை நீக்க எம்சிஎம்சி 5,409 விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

கடந்த 2022 முதல் போலி உள்ளடக்கத்தை நீக்க எம்சிஎம்சி 5,409 விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

20222 ஜனவரி 1 முதல் இவ்வருடம் ஜனவரி 15 வரை போலி படங்கள் மற்றும் டீப்ஃபேக்குகளை அகற்றுவதற்கான மொத்தம் 5,409 கோரிக்கைகள் சேவை வழங்குநர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தகவல் தொடர்பு பல்லூடக ஆணையத்தின் கோரிக்கைகளைத் தொடர்ந்து 92% அல்லது 4,955 உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டன.

போலி உள்ளடக்கத்திற்காக, மொத்தம் 59,967 கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதில் 51,912 (87%) உள்ளடக்கம் நீக்கப்பட்டன.

இந்த நீக்குதல் நடவடிக்கைகள் அனைத்தும் பெறப்பட்ட புகார்கள், ஒவ்வொரு தளமும் வகுத்துள்ள சமூக வழிகாட்டுதல்கள், நடைமுறையில் உள்ள உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அமைந்தவை என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அவதூறு உள்ளடக்கம் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து புக்கிட் காந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் அபு ஹுசின் ஹபீஸ் சையத் அப்துல் ஃபசலின் கேள்விக்கு ஃபஹ்மி பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset