செய்திகள் மலேசியா
அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இந்திய மாணவர்களுக்கு பியோன் மலேசியா வழிகாட்டுகிறது
அம்பாங்:
அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இந்திய மாணவர்களுக்கு மலேசிய பியோன் மலேசியா கல்வி நிறுவனம் வழிகாட்டுகிறது.
அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்னேஷ் கிருஷ்ண குமார் இதனை தெரிவித்தார்.
அரசாங்கத்தின் யூபியூ விண்ணப்பம் வரும் மார்ச் 23ஆம் தேதி வரை திறந்திருக்கும்.
இதன் அடிப்படையில் எஸ்பிஎம், எஸ்டிபிஎம், மெட்ரிகுலேஷன் மாணவர்கள் அரசுப் பல்கலைக்கழகங்கில் சேர விரும்பும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டல்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
குறிப்பாக வரும் மார்ச் 8ஆம் தேதி மாலை 10.30 மணி முதல் இது தொடர்பான இலவச விளக்கக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
முதலில் எஸ்பிஎம் மாணவர்களுக்கும் பின் எஸ்டிபிஎம் உட்பட மற்ற மாணவர்களுக்கும் விளக்கங்கள் அளிக்கப்படும்.
ஸூம் வாயிலாக நடைபெறும் இந்த விளக்கக் கூட்டத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
உயர் கல்வியமைச்சின் அதிகாரி பத்மராஜா இந்த விளக்கக் கூட்டத்தில் உரிய விளக்கங்களை தரவுள்ளார்.
ஆகவே இந்த வாய்ப்பை இந்திய மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்விளக்கக் கூட்டம் குறித்த மேல்விரங்களுக்கு @beyondeducationmalaysia எனும் சமூக ஊடக பக்கங்களை மாணவர்கள் வலம் வரலாம் என்று விக்னேஷ் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 3:31 pm
பிலிப்பைன்ஸில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து: மலேசியர்கள் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்
March 3, 2026, 3:30 pm
அசாம் பாக்கி விவகாரம் தொடர்பான விசாரணை; செயல்முறை பின்பற்றப்படுகிறது: பிரதமர்
March 3, 2026, 3:29 pm
சொஸ்மா சட்டத்தின் கீழ் சிறார்களை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்யவில்லை: டத்தோ குமார்
March 3, 2026, 3:28 pm
பள்ளிவாசல் நிதி திருட்டு; 3 பேருக்கு 6 மாத சிறைத்தண்டனை, 4,000 ரிங்கிட் அபராதம்
March 3, 2026, 1:58 pm
பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்த ஐந்தாம் படிவ மாணவர் காயம்
March 3, 2026, 1:55 pm
நீதிபதியை நீக்குவதற்கான இறுதி முயற்சியில் ரோஸ்மா தோல்வியடைந்தார்
March 3, 2026, 1:55 pm
பெர்சத்து கட்சிக்கு தெரியாமல் ஹம்சா ஜாஹித்தை சந்தித்தார்: மொஹைதின்
March 3, 2026, 1:17 pm
விபத்தில் சாம்பலான 4 வீடுகள்: ஒரே நாளில் வீடிழந்த 23 பேர்
March 3, 2026, 1:16 pm
