செய்திகள் மலேசியா
விபத்தில் சாம்பலான 4 வீடுகள்: ஒரே நாளில் வீடிழந்த 23 பேர்
ஜார்ஜ் டவுன்:
இன்று தஞ்சோங் தொக்கோங், தஞ்சோங் புங்கா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு வீடுகள் முழுமையாக எரிந்து சேதமடைந்ததில் 23 பேர் தங்களது வசிப்பிடத்தை இழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தமது தரப்புக்கு அதிகாலை 3.14 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாகப் பினாங்கு தீயணைப்பு, மீட்புத் துறையின் (JBPM) தீயணைப்பு, மீட்பு நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர், ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
“இந்தத் தீ விபத்தில் நான்கு வீடுகள் பாதிக்கப்பட்டு, 80 முதல் 90 சதவீதம் வரை சேதமடைந்துள்ளன,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், இந்தத் தீ விபத்தில் ஹோண்டா EX5 வகை மோட்டார் சைக்கிள் ஒன்றும் சுமார் 90 சதவீதம் வரை சேதமடைந்ததாக அவர் கூறினார்.
இரண்டு வீடுகளில் உள்ளூர் குடிமக்களும் மற்ற இரண்டு வீடுகளில் ரோஹிங்கியாவைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர்.
“காலை 6 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
“தீ ஏற்பட்ட காரணம், சேத மதிப்பீடு தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது,” என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 3:31 pm
பிலிப்பைன்ஸில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து: மலேசியர்கள் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்
March 3, 2026, 3:30 pm
அசாம் பாக்கி விவகாரம் தொடர்பான விசாரணை; செயல்முறை பின்பற்றப்படுகிறது: பிரதமர்
March 3, 2026, 3:29 pm
சொஸ்மா சட்டத்தின் கீழ் சிறார்களை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்யவில்லை: டத்தோ குமார்
March 3, 2026, 3:28 pm
பள்ளிவாசல் நிதி திருட்டு; 3 பேருக்கு 6 மாத சிறைத்தண்டனை, 4,000 ரிங்கிட் அபராதம்
March 3, 2026, 1:58 pm
பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்த ஐந்தாம் படிவ மாணவர் காயம்
March 3, 2026, 1:57 pm
அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இந்திய மாணவர்களுக்கு பியோன் மலேசியா வழிகாட்டுகிறது
March 3, 2026, 1:55 pm
நீதிபதியை நீக்குவதற்கான இறுதி முயற்சியில் ரோஸ்மா தோல்வியடைந்தார்
March 3, 2026, 1:55 pm
பெர்சத்து கட்சிக்கு தெரியாமல் ஹம்சா ஜாஹித்தை சந்தித்தார்: மொஹைதின்
March 3, 2026, 1:16 pm
