நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இல்லாத நிலம், கோடிக்கணக்கான பணம்: நடிகை, கணவர் மீது கடும் குற்றச்சாட்டு

சிரம்பான்: 

 56 வயது ஆடவர் ஒருவர் பெண் நடிகை,  அவரது கணவரால் ஏமாற்றப்பட்டு RM1.5 மில்லியன் இழந்ததாகப் புகார் அளித்துள்ளார்.

சிலாங்கூரில் இல்லாத ஒரு நிலத்தை விற்பனை செய்வதில் இந்த மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் தற்போது தீபகற்பத்தில் இல்லாததால், காவல் துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரம்பான் மாவட்ட காவல் துறை தலைவர், உதவி ஆணையர் அசாஹர் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

“இருவரும் சரவாக் மாநிலத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர்கள் தேடப்படும் நபர்களாக பதிவு செய்யப்பட்டு, மலேசிய குடிநுழைவு துறையின் சிறப்பு கண்காணிப்பு பட்டியலில் (SPK) சேர்க்கப்பட்டுள்ளனர்,” என்றார் அவர்.

முன்னதாக, அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலதிபர் ஒருவர் பெண் நடிகை, அவரது கணவரால் ஏமாற்றப்பட்டு நூற்றுக்கணக்கான ஆயிரம் ரிங்கிட் இழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

பாதிக்கப்பட்டவர் தாம் RM300,000 இழந்ததாகவும் மேலும் சிலர் கோடிக்கணக்கில் இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் இணையவாசிகள் நீண்ட காலமாகக் கலைத் துறையில் காணாமல் போன சில நடிகைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset