நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஸ்ஜித் இந்தியா கோலாலம்பூர், SIMS KL , MMYC இணைந்து காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி ஒப்படைப்பு

கோலாலம்பூர்:

மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் பள்ளிவாசலின் கீழ்தள அரங்கத்தில் “காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.

இந்த நிதி, “63 இரத்தினங்கள்” எனும் புத்தக விற்பனை வருவாய் மற்றும் முழு அல்-குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு குரல் பதிவு (Voice Over) திட்டத்தின் ஆதாயத்திலிருந்து இறைவனின் பாதையில் வழங்கப்படும் நன்கொடையாகும்.

இந்த நிகழ்ச்சி மஸ்ஜித் இந்தியா, SIMS KL, MMYC மற்றும் பல்வேறு இந்திய முஸ்லிம் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஜாக்கிம் துணை தலைமை இயக்குநர்
பிரிகேடியர் ஜெனரல் டத்தோ ஹாஜி முஹம்மது அஜிப் பின் இஸ்மாயில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

பொதுமக்களிடமிருந்து கிடைத்த நிதியை அவரிடம் நூலாசிரியரும் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலின் தலைமை இமாமான மௌலவி அல் ஹாபிஸ் செய்யது இப்ராஹிம், பள்ளிவாசல் துணைத் தலைவர் டத்தோ ஹாஜி ஹிஷாமுதீன் முன்னிலையில் ஒப்படைத்தார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset