நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்திற்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு

ஷாஆலம்:

கடந்த 2018ஆம் ஆண்டு போலிஸ் காவலில் இறந்த ஒரு தொழிலதிபரின் குடும்பத்திற்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு ஷாஆலம் உயர் நீதிமன்றம் இன்று போலிஸ், அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

எஸ். தனபாலனின் மனைவி வி. சாந்தி, தந்தை பி. வாத்தியன் ஆகியோருக்கு அலட்சியத்திற்காக பொது இழப்பீடுகளாக 500,000 ரிங்கிட் வழங்க வேண்டும்.

மேலும் வலி , துன்பம் உட்பட அதிகரித்த சேதங்களாக 200,000 ரிங்கிட், 30,000 ரிங்கிட் (உயிர் இழப்பு), 414,000 ரிங்கிட்  (சார்ந்திருப்பவர்களுக்கு இழப்பீடு, 10,000 ரிங்கிட் (இறுதிச் சடங்குச் செலவுகளை ஈடுகட்ட சிறப்பு இழப்பீடு) பெற வேண்டும் என்று நீதிபதி நூர் ஹயாதி மாட் தீர்ப்பளித்தார்.

கடந்த தனபாலன் 2018 ஏப்ரல் 17ஆம் தேதி இறந்து கிடந்த தேதியிலிருந்து இழப்பீட்டுத் தொகை தீர்க்கப்படும் வரை ஆண்டுக்கு ஐந்து சதவீத வட்டி விகிதத்தில் அரசாங்கம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி நூர் ஹயாட்டி, வழக்குரைஞருக்கு 7,000 ரிங்கிட் செலவுகளையும் வழங்கினார். 

ஜூம் கூட்ட விண்ணப்பம் மூலம் நடவடிக்கைகளில் இந்த முடிவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset