நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்எச் 370 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவு

பெய்ஜிங்:

எம்எச் 370 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்எச் 370 விமானம் காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகி விட்டது.

இந்நிலையில் விமானத்தில் பயணித்த எட்டு பயணிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மலேசிய ஏர்லைன்ஸ் உத்தரவிட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட இழப்பீடு இறுதிச் சடங்கு செலவுகள், உணர்ச்சித் துயரங்கள், பிற இழப்புகளை உள்ளடக்கியது.

மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.9 மில்லியன் யுவான் (சுமார் RM1.69 மில்லியன்) அதிகமாகப் பெறப்படும் என்றும் சாயோயாங் மாவட்ட மக்கள் நீதிமன்றம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்வதேசப் பிரிவான மலேசியன் ஏர்லைன்ஸ் இன்டர்நேஷனலுடன் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு தீர்வை எட்டிய பின்னர், சம்பந்தப்பட்ட குடும்பங்கள் 47 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதாக அந்நீதிமன்றம் மேலும் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset