நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்து, கம்போடியா மோதல் மீண்டும் வெடிக்கிறது; இரு நாடுகளும் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்: பிரதமர்

புத்ராஜெயா:

இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒரு புதிய மோதல் வெடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தாய்லாந்து, கம்போடியா இரு நாடுகளும் அதிகபட்ச சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு மலேசியா வலியுறுத்தியுள்ளது.

இரு நாடுகளும் திறந்த தொடர்பு வழிகளைப் பராமரிக்க வேண்டும்.

தற்போதுள்ள வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அமைதியை மீட்டெடுக்கவும், மேலும் சம்பவங்களைத் தடுக்கவும் உதவும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மலேசியா தயாராக உள்ளது.

புதுப்பிக்கப்பட்ட போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வரும் அவர்  கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் புதிய சண்டைகள் வெடித்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து இன்று கம்போடியா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவரைக் கொன்று, இருவர் காயமடைந்த அதிகாலை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இது நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

சமீபத்திய அறிக்கையில், அன்வர் தங்கள் பகிரப்பட்ட எல்லையில் ஆயுத மோதல்கள் பற்றிய செய்திகள் குறித்து மிகவும் கவலையடைந்ததாக பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset