நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக்கில் நடந்த பயிற்சி விமான விபத்தில் 2 பேர் காயம்

தைப்பிங்:

பேராக்கில் நடந்த பயிற்சி விமான விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

தைப்பிங் போலிஸ் தலைவர் முகமது நசீர் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.

தைப்பிங்கில் உள்ள டெக்கா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள திறந்தவெளிப் பகுதியில் சிறிய வகை  விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் பறந்து கொண்டிருந்த  ஒரு விமானியும் அவரது பயிற்சியாளரும் காயமடைந்தனர்.

நேற்று காலை 10.30 மணியளவில் அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மைக்ரோலைட் விமானம் தொடர்பான தகவல் போலிசாருக்கு கிடைத்தது.

விமானம் இயந்திரக் கோளாறால் பாதிக்கப்பட்டது.

இதனால்  திறந்தவெளிப் பகுதியில் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.

கண்காணிப்பு, ஆரம்ப மதிப்பீட்டை மேற்கொள்ள காவல்துறையினர் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

பாதிக்கப்பட்ட 46 வயது, 40 வயதுடைய இருவர் சிகிச்சைக்காக தைப்பிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது  என்று அவர் கூறினார் என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset