நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்லைப் பதட்டங்களை தாய்லாந்து, கம்போடியா உடனடியாக தணித்துக் கொள்ள வேண்டும்: மலேசியா வலியுறுத்து

புத்ராஜெயா:

எல்லைப் பதட்டங்களை தாய்லாந்து, கம்போடியா உடனடியாக தணித்துக் கொள்ள வேண்டும்.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ  முஹம்மத் ஹசான் இதனை வலியுறுத்தினார்.

தாய்லாந்து, கம்போடிய எல்லையில் நிலவும் சூழ்நிலையைத் தணிக்க வேண்டும்.

முன்னர் அடைந்த அமைதி முயற்சிகளைப் பாதிக்கக்கூடிய சம்பவங்களைத் தவிர்க்கவும் அனைத்து தரப்பினரும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மலேசியா கேட்டுக்கொள்கிறது.

தாய்லாந்து-கம்போடிய எல்லையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை மலேசியா தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.

வட்டார அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு ஆகியவை மலேசியாவின் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளன என்பதை புத்ராஜெயா வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

கடந்த ஜூலை 28ஆம் தேதி போர்நிறுத்த ஒப்பந்தம், ஆகஸ்ட் 7ஆம் தேதி பொது எல்லைக் குழு (ஜிபிசி) கூட்டம், அக்டோபர் 26ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட கேஎல் அமைதி ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளின் உறுதிப்பாடுகளையும் மலேசியா அங்கீகரிக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset