செய்திகள் மலேசியா
பிரதமரின் முன்னாள் செயலாளர் ஷம்சுல் இஸ்கண்டாரையும் எம்ஏசிசி கைது செய்தது
புத்ராஜெயா:
பிரதமரின் முன்னாள் செயலாளர் ஷம்சுல் இஸ்கண்டாரையும் எம்ஏசிசி கைது செய்துள்ளது.
ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் ஆவர்.
இவர் இன்று மதியம் ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்த சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
எம்ஏசிசி நாளை காலை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மற்றொரு சாட்சியான தொழிலதிபர் ஆல்பர்ட் டீயுடன் சேர்ந்து அவருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுக்கு விண்ணப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஷயத்தை எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி சிறிது நேரத்திற்கு முன்பு சமூக ஊடகங்களில் அறிவித்தார்.
இந்த வழக்கு பொது நலன் சார்ந்த வழக்கு என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
அதனால்தான், சில தரப்பினரால் இது கையாளப்படாமல் இருக்க எம்ஏசிசி உடனடியாக விசாரணையை நடத்தியது.
இந்த விசாரணைக்கு உதவுவதற்காக டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின், ஆல்பர்ட் டீ, சோபியா ரினி புயோங் என்ற பெண்ணை எம்ஏசிசி கைது செய்துள்ளது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 28, 2025, 11:07 pm
ஆல்பர்ட் டீயை நோக்கி அதிகாரிகள் துப்பாக்கியை நீட்டியதாக எழுந்த குற்றச்சாட்டை டான்ஸ்ரீ அஸாம் பாக்கி மறுத்தார்
November 28, 2025, 11:06 pm
வெப்ப மண்டல புயலின் தாக்கம் முடிவுக்கு வந்தது: மெட் மலேசியா
November 28, 2025, 11:04 pm
கேப்ரைஸ் அச்சுறுத்தல் வழக்கு: என்எப்ஏ என வகைப்படுத்தப்பட்டுள்ளது
November 28, 2025, 2:30 pm
MS Gold 5ஆவது கிளையின் திறப்பு விழா: டத்தோ மாலிக்கின் தாயார் திறந்து வைத்தார்
November 28, 2025, 2:24 pm
முகமூடி அணிந்த எம்ஏசிசி அதிகாரிகள் தொழிலதிபர் ஆல்பர்ட் டெய்யை கைது செய்தனர்
November 28, 2025, 11:59 am
பள்ளிகளில் திடல் இல்லை என்பது விளையாடும் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு மிகப் பெரிய துயரமாகும்: டத்தோஸ்ரீ சரவணன்
November 28, 2025, 11:57 am
