நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்ப மண்டல புயலின் தாக்கம் முடிவுக்கு வந்தது: மெட் மலேசியா

கோலாலம்பூர்:

வெப்ப மண்டல புயல் சென்யார் மலேசியாவை விட்டு வெளியேறிவிட்டது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட் மலேசியா) இயக்குநர்  டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் இதனை தெரிவித்தார்.

அது முடிவுக்கு வந்தது என கூறலாம். மீதமுள்ள ஒரே விளைவு மழை மட்டும் தான்.

முன்னதாக மெட் மலேசியா, நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு சிலாங்கூர், நெகிரி செம்பிலான் இடையே கடற்கரையில் புயல் கரையைக் கடந்ததாகவும், அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் (கிமீ/மணி) எட்டியதாகவும் தெரிவித்தது.

இதற்கிடையில்.இன்று காலை 11 மணிக்கு வடக்கு அட்சரேகை 4.0 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 10.4.0 இல் கண்டறியப்பட்ட வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து மெட் மலேசியா இன்று மாலை ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது.

இந்த சூழ்நிலை தென் சீனக் கடலில் தொடர்ந்து கனமழை, பலத்த காற்ற, கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடும்.

குவாந்தான் கடற்பரப்பில் புதிய வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பகாங், திரெங்கானு இடையேயான கடலோரப் பகுதிகளை அது பாதிக்கிறது என்றும் முகமட் ஹிஷாம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset