நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மக்கள் உண்மைகளின் அடிப்படையில் சரியான முடிவை எடுக்க வேண்டும்; உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல: டத்தோஸ்ரீ ரமணன்

கோத்தா கினபாலு:

சபா மக்கள் உண்மைகளின் அடிப்படையில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல என்று கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

17ஆவது சபா மாநிலத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் வாக்களிக்கும்போது உணர்ச்சிகளை விட உண்மைகள், யதார்த்தத்தின் அடிப்படையில் சபா மக்கள் சரியான தேர்வை எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு தேர்தல்கள் தீவிரமானவை, சவாலானவை என்று விவரிக்கப்படுகிறது.

இருந்தாலும் மாநிலம், அதன் மக்கள் மீது அக்கறை காட்டுவதில் மத்திய அரசின் பங்கை மறுப்பதற்கில்லை.

மோயோக் மாநில சட்டமன்றத்தின் முக்கிய செயல்பாட்டு அறையில் கடைசி நிமிட தயாரிப்புகளைக் கவனித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மாநிலத்தின் எதிர்காலம் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய சபா மாநில வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணியை தேர்வு செய்ய வேண்டும்.

முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் தலைமையிலான மத்திய அரசுக்கும் சபா மாநில அரசுக்கும் இடையிலான உறவு தற்போது மிகச் சிறப்பாக உள்ளது.

அது நட்புறவாகவும் பரிச்சயமாகவும் உள்ளது.

இதனால் சபா மக்களின் நலனுக்கு உரிய கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான அதிக இடம் திறக்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான  டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset