நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளில் திடல் இல்லை என்பது விளையாடும் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு மிகப் பெரிய துயரமாகும்: டத்தோஸ்ரீ சரவணன்

சுங்கைபூலோ:

பள்ளிகளில் திடல் இல்லை என்பது விளையாடும் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு மிகப் பெரிய துயரமாகும்.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

சுங்கைபூலோ கோல்பீல்ஸ் தமிழ்ப்பள்ளியில் மூன்று முக்கியமான விழாக்கள் இன்று நடைபெறுகிறது.

பள்ளியின் திடல் திறப்பு விழா, 39ஆவது விளையாட்டுப் போட்டி, பள்ளி நூலக திறப்பு விழா ஆகியவை ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.

இது வரலாற்றுபூர்வமான நிகழ்வுகள் ஆகும்.

இதற்காக உழைத்த பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், பெற்றோர்கள் என அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில் இந்த பள்ளியில் திடல் இல்லாத பிரச்சினையை தலைமையாசிரியர் அம்புஜம் கண்ணன், திடல் பணிக்குழு தலைவர் சுகுமாரன் ஆகியோர் என் பார்வைக்கு கொண்டு வந்தனர்.

பள்ளி கட்டும் போதே இந்த திடலையும் சேர்த்து அமைத்து தந்திருக்கலாம்.

ஆனால் அப்படி செய்யப்படவில்லை. தலைவர்களாக இருந்தால் மட்டும் போதாது இந்த விவகாரத்தில் தூரநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.

மேலும் டிக் டாக்கில் மற்றவர்களை குறை கூறுவதை விட இந்த திடலை அமைக்கும் முயற்சியில் இறங்குவது நல்லது என முடிவு செய்யப்பட்டது.

பல நல்லுள்ளங்களின் ஆதரவின் அடிப்படையில் தற்போது இந்த திடல் அமைக்கப்பட்டுள்ளது.

இனி இந்த பள்ளியில் திடல் இல்லை என்று யாரும் கூற முடியாது. இந்த வட்டாரத்தில் பெரிய திடல் கொண்ட பள்ளியாக இது விளங்குகிறது.

இன்று போட்டி விளையாட்டு. ஆனால் கடுமையான மழை பெய்கிறது என மாணவர்கள் வருத்தப்படக்கூடாது.

காரணம் இனி எப்போதுமே மாணவர்களான நீங்கள் இந்த திடலை பயன்படுத்தலாம்.

பள்ளிகளில் திடல் இல்லை என்பது விளையாடும் பருவத்தில் உள்ள
மாணவர்களுக்கு மிகப் பெரிய துயரமாகும்.

இனி அந்த துயரம் உங்களுக்கு இருக்காது என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset