நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MS Gold 5ஆவது கிளையின் திறப்பு விழா: டத்தோ மாலிக்கின் தாயார் திறந்து வைத்தார்

கோலாலம்பூர்:

MS Gold 5ஆவது நகைக் கடையின் திறப்பு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

நாட்டில் தங்க, வைர நகை விற்பனையில் MS Gold முன்னிலை வகித்து வருகிறது.

குறுகிய காலத்தில் சிறப்பான விற்பனை, சேவையின் மூலம் தற்போது MS Gold நகைக்கடையின் 5ஆவது கிளை நிறுவனம் இன்று ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் திறக்கப்பட்டது.

MS Gold தோற்றுநரும் உரிமையாளருமான டத்தோ அப்துல் மாலிக்கின் தாயார் இக் கிளை நிறுவனத்தை திறந்து வைத்தார்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்,  டத்தோ அப்துல் மாலிக், கிரீன் பேக்கேட் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அதே வேளையில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களும் இப் புதிய கிளைக்கு வருகை புரிந்தனர்.

MS Gold 5ஆவது கிளை நிறுவனத்தின் அறிமுகத்துடன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

5ஆவது கிளையின் உச்சக்கட்ட திறப்பு விழா வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான நடிகர் சிம்பு இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.

நடிகர் சிம்பு வருவதால் டிசம்பர் 6ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியா விழா கோலமாக இருக்கும்.

ஆக மக்கள் திரளாக இவ்விழாற்கு திரண்டு வருமாறு டத்தோ அப்துல் மாலிக் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset