நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆல்பர்ட் டீயை நோக்கி அதிகாரிகள் துப்பாக்கியை நீட்டியதாக எழுந்த குற்றச்சாட்டை டான்ஸ்ரீ அஸாம் பாக்கி மறுத்தார்

சைபர்ஜெயா:

கைது செய்யப்பட்டபோது எம்ஏசிசி அதிகாரிகள் ஆல்பர்ட் டீயை நோக்கி துப்பாக்கியை நீட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி தலைமை ஆணைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி மறுத்தார்.

மேலும் தொழிலதிபரின் வீட்டில் எம்ஏசிசி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனது தரப்பு போலிசாரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

குறிப்பிட்ட அதிகாரிக்கு எதிராக கூறப்பட்ட அவதூறு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு வசதியாக இன்று ஒரு போலிஸ் புகார் தாக்கல் செய்யப்பட்டது.

எந்தவொரு குறிப்பிட்ட தரப்பினரும் சரிபார்க்கப்படாத செய்திகளைப் பரப்புவதை உறுதி செய்வதற்காகவும் இந்த போலிஸ் புகார் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset