நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேப்ரைஸ் அச்சுறுத்தல் வழக்கு: என்எப்ஏ என வகைப்படுத்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர்:

கடந்த ஜூலை மாதம் சமூக ஊடக செல்வாக்கு மிக்க கேப்ரைஸுக்கு இரண்டு நபர்கள் புகார் அளித்த அச்சுறுத்தல் வழக்கை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாது (என்எப்ஏ) என வகைப்படுத்தியுள்ளனர்.

மேரிடைம் நெட்வோர்க் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன், உயர் செயல்திறன் கொண்ட உடல் உருமாற்ற பயிற்சியாளர் சையத் முகமது முராத் சையத் நசீம் ஆகியோர் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆவர்.

இவர்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507 இன் கீழ் விசாரிக்கப்பட்டனர்.

இருவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ஐசாத் முஸ்தபா,

கடந்த நவம்பர் 26 தேதியிட்ட ஷா ஆலம் குற்றவியல் புலனாய்வுத் துறைத் தலைவர் முகமது பைசல் முகமது சாலே எழுதிய கடிதம் மூலம் இந்த முடிவு குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்தக் கடிதம் மெசர்ஸ் சோலேஹுதீன் & ஓசியரின் சட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

விசாரணை ஆவணங்கள் என்எப்ஏ முடிவை எடுத்த சிலாங்கூர் துணை அரசு வழக்கறிஞருக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

அனைத்து வழக்குப் பொருட்களும் விரைவில் திருப்பி அனுப்பப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset