செய்திகள் மலேசியா
சம்சுல் ஹாரிஸ் கழுத்தில் ஏற்பட்ட காயங்களால் இறந்தார் என்பது இரண்டாவது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது: வழக்கறிஞர்
கோலாலம்பூர்:
சம்சுல் ஹாரிஸ் கழுத்தில் ஏற்பட்ட காயங்களால் இறந்தார் என்பது இரண்டாவது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்சுல் ஹரிசின் குடும்ப வழக்கறிஞர் நரன் சிங் இதனை கூறினார்.
இறந்த மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ரிசர்வ் அதிகாரிகள் பயிற்சிப் படை (பலபேஸ்) கேடட் சம்சுல் ஹாரிஸ் ஷம்சுதீனின் இரண்டாவது பிரேத பரிசோதனையின் தடயவியல் கண்டுபிடிப்புகள், அவரது மரணத்திற்கு கழுத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான காயங்கள் தான் காரணம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
இன்று கோலாலம்பூர் மருத்துவமனையில் உள்ள தேசிய தடயவியல் மருத்துவ நிறுவனத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த நரன், சம்சுல் உயிருடன் இருந்தபோது காயங்கள் ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றார்.
இரண்டாவது பிரேத பரிசோதனை, முதல் பிரேத பரிசோதனையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஹிஸ்டோபோதாலஜிக்கல் பொருட்களுடன் நடத்தப்பட்டன.
இந்த கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, சம்சுலுக்கு காயங்களை ஏற்படுத்திய தரப்பினரை அடையாளம் காணவும், அவரை விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றத்திற்கு கொண்டு வரவும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் சட்டத்துறை தலைவரை அவர் வலியுறுத்தினார்.
சட்டத்துறை தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் காயங்களுக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியம்.
மேலும் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 28, 2025, 11:09 pm
பிரதமரின் முன்னாள் செயலாளர் ஷம்சுல் இஸ்கண்டாரையும் எம்ஏசிசி கைது செய்தது
November 28, 2025, 11:07 pm
ஆல்பர்ட் டீயை நோக்கி அதிகாரிகள் துப்பாக்கியை நீட்டியதாக எழுந்த குற்றச்சாட்டை டான்ஸ்ரீ அஸாம் பாக்கி மறுத்தார்
November 28, 2025, 11:06 pm
வெப்ப மண்டல புயலின் தாக்கம் முடிவுக்கு வந்தது: மெட் மலேசியா
November 28, 2025, 11:04 pm
கேப்ரைஸ் அச்சுறுத்தல் வழக்கு: என்எப்ஏ என வகைப்படுத்தப்பட்டுள்ளது
November 28, 2025, 2:30 pm
MS Gold 5ஆவது கிளையின் திறப்பு விழா: டத்தோ மாலிக்கின் தாயார் திறந்து வைத்தார்
November 28, 2025, 2:24 pm
முகமூடி அணிந்த எம்ஏசிசி அதிகாரிகள் தொழிலதிபர் ஆல்பர்ட் டெய்யை கைது செய்தனர்
November 28, 2025, 11:59 am
பள்ளிகளில் திடல் இல்லை என்பது விளையாடும் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு மிகப் பெரிய துயரமாகும்: டத்தோஸ்ரீ சரவணன்
November 28, 2025, 11:57 am
