நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முகமூடி அணிந்த எம்ஏசிசி அதிகாரிகள் தொழிலதிபர் ஆல்பர்ட் டெய்யை கைது செய்தனர்

பூச்சோங்:

முகமூடி அணிந்த எம்ஏசிசி அதிகாரிகள் தொழிலதிபர் ஆல்பர்ட் டெய்யை கைது செய்தனர்.

சிலாங்கூரின் பூச்சோங்கில் உள்ள தொழிலதிபர் ஆல்பர்ட் டெய்யின் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதை அடுத்து இன்று காலை எம்ஏசிசி அவரை கைது செய்தது.

எம்ஏசிசி அதிகாரிகள் குழு, ஆல்பர்ட் டெய்யை கைவிலங்கிட்டு, உரிமத் தகடு இல்லாத கருப்பு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு தற்போது வெளியாகி உள்ளது.

வீடியோவைப் பதிவு செய்த அவரது வழக்கறிஞர் ஜைத் மாலேக், தெய்யை எங்கே அழைத்துச் செல்கிறார் என்று அதிகாரியிடம் திரும்பத் திரும்பக் கேட்பதையும், பொறுப்பான அதிகாரியிடம் பேசச் சொல்வதையும் கேட்க முடிகிறது,

ஆனால் அவர் புறக்கணிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சபாவின் முக்கிய அரசியல்வாதிகள் மீதான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் முக்கிய நபராக ஆல்பர்ட் டெய் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset