நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மன்னித்து விடுங்கள்; ஹட்யாயில் உள்ள மலேசியர்களை மீட்க நாங்கள் கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்

புத்ராஜெயா:

மன்னித்து விடுங்கள். ஹட்யாயில் உள்ள மலேசியர்களை மீட்க நாங்கள் கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டும்.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை தெரிவித்தார்.

தெற்கு தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட சில மலேசியர்களை கெடாவில் உள்ள புக்கிட் காயூ ஹீத்தாம் எல்லைக்கு கொள்கலன்களில் கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

அண்டை நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்னும் இலகுரக வாகனங்கள், பேருந்துகள் அல்லது லோரிகள் செல்ல முடியாததால் இது நிகழ்ந்தது.

சாடாவோவிலிருந்து புக்கிட் காயூ ஹீத்தாம் செல்லும் சாலை வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனால் பல கொள்கலன்கள் அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.

யாராவது பின்னர் புகார் செய்தால், லோரிகள், பேருந்துகள் கடந்து செல்ல முடியாததால், நாங்கள் கொள்கலன்களைப் பயன்படுத்துகிறோம்.

இதற்காக உங்களிடம்  நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset