நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எச்ஆர்டி கோர்ப் விருதுகள் 2025; மலேசியாவின் மனித மூலதன மேம்பாட்டு முயற்சிகளை அங்கீகரிக்கிறது: டத்தோ அஸ்மான்

கோலாலம்பூர்:

எச்ஆர்டி கோர்ப்  விருதுகள் 2025 மலேசியாவின் மனித மூலதன மேம்பாட்டு முயற்சிகளை அங்கீகரிக்கிறது.

மனிதவள அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோப் இதனை கூறினார்.

எச்ஆர்டி கோர்ப்  விருது விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

நாட்டின் பொருளாதார போட்டித்தன்மையின் மையமாக மனித மூலதன மேம்பாட்டை வலுப்படுத்துவதில் மலேசியாவின் உறுதியை இவ்விழா நிரூபிக்கிறது.

கடந்த 2001 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருது விழா,

எச்ஆர்டி கோர்ப்  மேற்பார்வையின் கீழ் திறமை மேம்பாட்டில் சிறந்து விளங்கும் முதலாளிகள், பயிற்சி வழங்குநர்கள், தனிநபர்களுக்கான மிக உயர்ந்த அங்கீகாரத்தை வழங்குகிறது.

23ஆவது விருது விழாவிற்கு மொத்தம் 770 பரிந்துரைகள் பெறப்பட்டன. இது இதுவரையிலான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இதனால் நிலையான, உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அடித்தளமாக திறமையில் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்த தொழில்துறையின் அதிகரித்த விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள், உலகமயமாக்கல், புதிய வகையான வேலைவாய்ப்புகளின் தோற்றத்திற்கு ஏற்ப வேலை உலகம் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது.

எனவே மலேசியா மனித மூலதன மேம்பாட்டிற்கு மிகவும் முழுமையான அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டத்தோ அஸ்மான் கூறினார்.

ஒரு நாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி உள்கட்டமைப்பு அல்லது தொழில்நுட்பத்தில் மட்டும் இல்லை, மாறாக பணியாளர்களின் திறன்கள், படைப்பாற்றல் மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் வலிமையில் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

மலேசியர்களிடையே வேலை வாய்ப்புகள், வருமான நிலைகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதற்காக தரம், தொழில்துறை தொடர்பான பயிற்சிக்கான அணுகலை எச்ஆர்டி கோர்ப் தொடர்ந்து வழங்கி வருகிறது.

அறிமுகப்படுத்தப்பட்ட முன்முயற்சிகளில் இலக்கவியல் கற்றலின் விரிவாக்கம், மாறிவரும் பொருளாதார நிலப்பரப்புக்கு ஏற்ப ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும் பன்முகப்படுத்தவும் உதவும் குறிப்பிட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset