நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அவதூறு பேசும் நீங்கள் பணக்காரர்கள்; மக்கள் ஏழைகள்: பிரதமர் காட்டம்

துவாரன்:

அவதூறு பேசும் நீங்கள் பணக்காரர்களாக இருக்கிறீர்கள். ஆனால் மக்கள் ஏழைகளாக உள்ளனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை காட்டமாக கூறினார்.

சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூரின் தலைமைக்கு  வெளிப்படையான பாராட்டுகளை பிரதமர் தெரிவித்தார்.

மேலும் அவரை எந்தவொரு தனிப்பட்ட நலன்களையும் நாடாமல் மக்களின் பிரச்சினைகளை ஆதரித்த ஒரு கொள்கை ரீதியான, சுத்தமான, நிலையான தலைவர்.

சபாவிற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பு முழுவதும், ஹாஜிஜி ஒருபோதும் தனிப்பட்ட கோரிக்கைகளை கொண்டு வரவில்லை.

மாறாக தண்ணீர், மின்சாரம், சாலைகள், சபாவில் உள்ள அனைத்து மாவட்டங்களின் நலன் உள்ளிட்ட மக்களின் தேவைகளை மட்டுமே வலியுறுத்தினார் என்று அவர் கூறினார்.

அவர் ஒருபோதும் தனக்கோ அல்லது தனது குடும்பத்துக்கோ எதையும் கேட்கவில்லை. அவர் இரவும் பகலும் என்னிடம் கூறினார்.

சபாஹான்களின் பிரச்சனைகளைப் பற்றி அவர் சிந்தித்தார்.

டத்தோஸ்ரீ சாலைகள், டத்தோஸ்ரீ இங்கு தண்ணீர், டத்தோஸ்ரீ இங்கு மின்சாரம் என்று அவர் என்னிடம் கூறிவார்.

இன்று இங்குள்ள சுலாமானில் உள்ள பஜாவ் சமா கலாச்சார மண்டப வளாகத்தில் உள்ளூர் சமூகத் தலைவர்கள், துவாரன் தொழில்முனைவோர் நண்பர்கள் நிகழ்ச்சியில் பேசியபோது இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset