நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி விடுதி குளியலறையில் தாக்கப்பட்ட 4ஆம் படிவம் மாணவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்

சுங்கைப்பட்டாணி:

பள்ளி விடுதி குளியலறையில் தாக்கப்பட்ட 4ஆம் படிவம் மாணவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் உறுதிப்படுத்தினார்.

பள்ளியின் விடுதி கழிப்பறையில் ஒரு ஆண் மாணவர் மயக்கமடையும் வரை தாக்கப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவ நான்கு மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, 16 முதல் 17 வயதுடைய நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை, சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களில் ஒருவரான 16 வயது சிறுவன், விசாரணைக்கு உதவுவதற்காக சுங்கை பட்டாணி நீதிமன்றத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மற்ற மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset