செய்திகள் மலேசியா
மோயோக்கில் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி ஒத்துழைப்பு வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
கோத்தா கினபாலு:
மோயோக்கில் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி ஒத்துழைப்பு வலுப்படுத்துகிறது.
கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
17ஆவது சபா மாநிலத் தேர்தல் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது.
இதில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் ரெமிஸ்டா ஜிம்மி டெய்லர் மோயோக் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவரின் வெற்றியை உறுதி செய்வதற்காக நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படுகிறது.
இரு கூட்டணிகளுக்கும் இடையிலான தேர்தல் இயந்திரங்களின் ஒருங்கிணைப்பு மூலம் ஒத்துழைப்பு வெளிப்படுகிறது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.
இந்த ஒத்துழைப்பு சபாவின் அரசியல் களத்தில், குறிப்பாக மோயோக்கில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது.
அம்னோ, மசீச, மஇகா, ஜிபிஆர்எஸ் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட தேசிய முன்னணி பெனாம்பாங் தேர்தல் கேந்திரங்கள் முழு உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஒன்றிணைந்ததைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இது நாம் ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறோம் என்பதை காட்டுகிறது.
ஒன்றாக, வேட்பாளர் ரெமிஸ்டா ஜிம்மி டெய்லருடன் மோயோக் அதிக நம்பிக்கையுடனும் மகிமையுடனும் முன்னேறுவதை உறுதிசெய்ய இந்த சிறந்த முயற்சியை வெற்றிகரமாக்குவோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 11:12 am
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
November 25, 2025, 11:11 am
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்: டத்தோ குமார்
November 25, 2025, 11:10 am
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டி: ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ஸ்ரீ வாகை சூடினார்
November 25, 2025, 11:09 am
வெள்ளம் மோசமடைந்து வருகிறது: 10 மாநிலங்களில் 19,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
November 25, 2025, 8:46 am
வெள்ளம் சூழும் அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
November 25, 2025, 8:18 am
2021 முதல் 5,293 ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர்: ஃபட்லினா
November 24, 2025, 9:28 pm
ஜாலான் கிள்ளான் லாமாவில் 10 மீட்டர் அளவுக்கு நிலச்சரிவு
November 24, 2025, 9:26 pm
முழு முயற்சியுடன் எஸ்பிஎம் தேர்வை எழுதுங்கள்: மாணவர்களுக்கு டத்தோ லோகா பாலமோகன் வலியுறுத்து
November 24, 2025, 9:25 pm
