நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன

கோத்தா கினபாலு:

சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன.

17ஆவது சபா மாநிலத் தேர்தல் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை சரியாக 8 மணிக்கு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.

இதனால் 24,426 முன்கூட்டிய வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளைச் செய்ய இடம் கிடைத்தது.

மொத்த வாக்காளர்களில், 11,697 பேர் ராணுவ வீரர்கள், அவர்களது மனைவியர், மேலும் 12,729 பேர் போலிஸ் அதிகாரிகள், அவர்களது மனைவியாரும் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset