நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டி: ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ஸ்ரீ வாகை சூடினார்

ஈப்போ:

ஈப்போவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டியில் ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி  த.தனுஸ்ஸ்ரீ  வாகை சூடினார்

இரண்டாவது இடத்தை ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி மாணவியான வி. சர்வ நாயகியும் மூன்றாவது இடத்தை ஈப்போ குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளி மாணவியான பி. கீர்த்திகாசி  வாகை சூடினார்.
இப்போட்டியை ஏ.கே. சினர்ஜி நிறுவனத்தின் இயக்குனர் ஏ.கே. ஆனந்தராஜா ஏற்பாட்டில் நடைபெற்றது.

இப்போட்டியில்  இறுதி சுற்றில் பேரா, சிலாங்கூர் , பினாங்கு, கெடாவில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டி ஈப்போவில் ஆர்ட்டிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இறுதி சுற்றில் 10 மாணவர்கள் பங்கேற்றனர்.

கல்வி, விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இசைத் துறையில் சிறந்து விளங்க ஊக்குவிக்க  இந்தப் போட்டியை நடத்துவதாக ஏ.கே. ஆனந்தராஜ் கூறினார்.

இப்போட்டியில் இறுதி சுற்றுக்கு தேர்வான 10 நபர்களை கொண்டு இசை நாடா  தயாரிக்கப்படும் என்று இப்போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து  வழங்கிய இசையமைப்பாளர் ஜெய் தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ளவர்களுக்கு இசை மற்றும் பாடல்கள பாட அதிக ஆர்வம் உள்ளது. இதனை முறைப்படி கற்றால் நிச்சயம் முன்னேறலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

இதே வேளையில் உள் நாட்டில் தயாரிக்கப்படும் இசை நாடா மற்றும் திரைப்படங்களுக்கு பொது மக்கள் தொடர்ந்து  ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது போன்ற போட்டிகளை சமுக அமைப்புகள் நடத்தி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset