செய்திகள் மலேசியா
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
சிலாங்கூர் ஜாலான் பந்திங்-டெங்கில், மைல் 8 இல் சாலையோரத்தில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்தது.
இந்த சம்பவத்தில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் இறந்தார்.
புக்கிட் அமான் ஜேஎஸ்ஜே தீவிர குற்றப் பிரிவின் அதிகாரிகள், உறுப்பினர்கள் குழு இரவு 8.10 மணியளவில் பந்திங், டெங்கில், சிப்பாங் ஆகிய இடங்களில் கொள்ளை குற்றங்களைக் கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒரு நபர் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி காரை அந்தக் குழு கண்டது.
சம்பந்தப்பட்ட காரை நிறுத்த குழு முயன்றபோது, சந்தேக நபர் திடீரென காருக்குள் இருந்து போலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததால் போலிசார் குழு திருப்பிச் சுட்டது.
சந்தேக நபர் இறந்துவிட்டதாக மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் உள்ளூர் ஆடவர் என்று சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் எந்த அடையாளமும் கிடைக்கவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 11:12 am
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
November 25, 2025, 11:10 am
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டி: ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ஸ்ரீ வாகை சூடினார்
November 25, 2025, 11:09 am
வெள்ளம் மோசமடைந்து வருகிறது: 10 மாநிலங்களில் 19,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
November 25, 2025, 8:46 am
வெள்ளம் சூழும் அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
November 25, 2025, 8:18 am
2021 முதல் 5,293 ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர்: ஃபட்லினா
November 24, 2025, 9:28 pm
ஜாலான் கிள்ளான் லாமாவில் 10 மீட்டர் அளவுக்கு நிலச்சரிவு
November 24, 2025, 9:26 pm
முழு முயற்சியுடன் எஸ்பிஎம் தேர்வை எழுதுங்கள்: மாணவர்களுக்கு டத்தோ லோகா பாலமோகன் வலியுறுத்து
November 24, 2025, 9:25 pm
