நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முழு முயற்சியுடன் எஸ்பிஎம் தேர்வை எழுதுங்கள்: மாணவர்களுக்கு டத்தோ லோகா பாலமோகன் வலியுறுத்து

கோலாலம்பூர்:

நாளையில் இருந்து தொடங்கும் எஸ்பிஎம் தேர்வை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை பிபிபி  தலைவர் டத்தோ டாக்டர் லோகா பாலமோகன் கூறினார்.

இது அவர்களின் கல்விப் பயணத்தை வடிவமைக்கும் ஒரு முக்கிய அடிக்கல்லாகும்.

மாணவர்கள் முழுமையான முயற்சியுடன் தேர்வில் ஈடுபட வேண்டும்.

தங்கள் அறிவு, திறன்களை வெளிப்படுத்த நீண்ட நாள் தயாராகி வந்துள்ளதாகவும் அவர் ஊக்குவித்தார்.

பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் கவலை அழிக்கிறது என்று தெரிவித்தாலும், கல்வியமைச்சு தேர்வு தடையின்றி நடைபெறும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தன்னம்பிக்கை தெரிவித்தார்.

மழையோ வெயிலோ, அது மாணவர்களின் செயல்திறனை தடுக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

மாணவர்கள் தேர்வுக் காலத்தின் முழுவதும் போதிய ஓய்வு எடுத்து, உடல்நலத்தை கவனித்து, குடும்பத்தினரை பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

அனைத்து தேர்வர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset