நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் கிள்ளான் லாமாவில் 10 மீட்டர் அளவுக்கு நிலச்சரிவு

கோலாலம்பூர்:

கனமழையை தொடர்ந்து  இன்று மாலை ஜாலான் கிள்ளான் லாமா லோரோங் ஜுக்ரா டாலமில் மற்றொரு நிலச்சரிவு கண்டறியப்பட்டது.

இது தாமான் யுனைடெட்டில் முதல் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது.

மாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் ஸ்ரீ லெம்பா பிளாட்ஸின் பிளாக் டிக்கு அடுத்ததாக 10 மீட்டர் உயர சரிவு ஏற்பட்டது.

இதனால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் சேதமடைந்தது.

மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு நிலைமையைக் கண்காணிக்க ஸ்ரீ பெட்டாலிங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினரும் சம்பவ இடத்தில் இருந்தனர்.

செபூத்தேவின் தாமான் யுனைடெட்டில் 104 வீடுகளைக் கொண்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் இரண்டு கார்கள்,  பல மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதைத் தொடர்ந்து, அவர்களின் வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset