நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளம் மோசமடைந்து வருகிறது: 10 மாநிலங்களில் 19,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கோலாலம்பூர்:

நாட்டில் வெள்ளம் மோசமடைந்து வருவதால் 10 மாநிலங்களில் கிட்டத்தட்ட 19,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இன்று காலை 9 மணி நிலவரப்படி 121 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் மொத்தம் 19,422 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) படி, நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று பதிவு செய்யப்பட்ட 16,201 பேருடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.

கிளந்தானில் அதிகபட்சமாக 9,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து பெர்லிஸ் (2,644), பேராக் (2,604), சிலாங்கூர் (2,119) ஆகியவை உள்ளன.

இதில் கெடா, பினாங்கு (377), திரெங்கானு (98), சரவா (32), பகாங் (23), கோலாலம்பூர் (இரண்டு) ஆகிய இடங்களில் 1,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் நட்மா உறுதிப்படுத்தியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset